தொடக்ககால மனிதப் புலப்பெயர்வு
Appearance
தொன்மையான மனிதர்களின் குடியேற்றங்கள் மற்றும் நவீன மனிதர்களின் விரிவாக்கங்கள் 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஓமோ இரெக்டசு ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேறியதில் இருந்து தொடங்கியது. இதன் பின் ஓமோ கெய்டெல்பெர்கன்சிசு உள்ளிட்ட பிற முற்காலத்திய மனிதர்களின் வெளியேற்றங்கள் ஆரம்பமானது. இவர்களே உடற்கூற்றியல் ரீதியான நவீன மனிதர்கள் மற்றும் நியாண்டர்தால் ஆகிய இரு இனங்களுக்கும் சாத்தியமான மூதாதையர் ஆவர். இறுதியாக, நவீன மனிதரின் ஆப்பிரிக்கத் தோற்றக் கோட்பாடு படி சுமார் 100,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் இருந்து ஓமோ செப்பியன்கள் வெளியேறினர். சுமார் 60,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆசியா முழுவதும் பரவினர். பின்னர் பிற கண்டங்கள் மற்றும் தீவுகளில் வாழத்தொடங்கினர்.
மேலும் படிக்க
[தொகு]- Jared Diamond, Guns, germs and steel. A short history of everybody for the last 13'000 years, 1997.
- Veeramah, Krishna R.; Hammer, Michael F. (4 February 2014). "The impact of whole-genome sequencing on the reconstruction of human population history". Nature Reviews Genetics 15 (3): 149–162. doi:10.1038/nrg3625. பப்மெட்:24492235.
- "Anatomically modern human in Southeast Asia (Laos)". Proceedings of the National Academy of Sciences 109 (36): 14375–14380. 2012. doi:10.1073/pnas.1208104109. பப்மெட்:22908291. பப்மெட் சென்ட்ரல்:3437904. Bibcode: 2012PNAS..10914375D. http://www.pnas.org/content/early/2012/08/15/1208104109.abstract.